நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

மலையாளத்தில் கடந்த 2016ல் பஹத் பாசில் நடிப்பில் வெளியான படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பஹத் பாசிலுக்கு இந்த படத்தின் வெற்றி மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் தான் தேசிய விருது நடிகையான அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் திலீஷ் போத்தன். அதைத் தொடர்ந்து 'தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும், ஜோஜி' என மீண்டும் தான் இயக்கிய இரண்டு படங்களிலும் பஹத் பாசிலை கதாநாயகனாக நடிக்க வைத்தார்.
இதனை தொடர்ந்து தற்போது பிசியான குணச்சித்திர நடிகராக நடித்து வருவதால் கிட்டத்தட்ட ஐந்து வருடமாக டைரக்ஷனை விட்டு ஒதுங்கி இருக்ந்தார். இந்த நிலையில் மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் அவர், மோகன்லால் நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் சிபு பேபி ஜான் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் உறுதிப்படுத்தி உள்ளனர்.