மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

தெலுங்கில் நடிகர் ராம்சரண் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் படம் 'பெத்தி'. இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் மார்ச் 27ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 30க்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. தற்போது அந்த தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என தேதி குறிப்பிடாமல் தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது.
இந்த நிலையில் தான், படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடக்க வேண்டி இருக்கிறது என்றும் ஒரு பாடல் காட்சியை படமாக இருக்கிறார்கள் என்றும் அதனால் தான் படம் தாமதமாகிறது என்றும் சொல்லப்பட்டது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் புச்சிபாபு சனா படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராம்சரண் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பெத்தி படத்தின் படப்பிடிப்பு ஆறு நாட்களில் நிறைவடைய இருக்கிறது என்று கூறியுள்ளார்.