நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

கடந்த 2019ல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்தார் நடிகர் பிரித்விராஜ். இதன் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடம் இதன் இரண்டாம் பாகமாக எல் 2 ; எம்புரான் என்கிற படத்தை மோகன்லால் கூட்டணியில் உருவாக்கி வெளியிட்டார். ஆனால் இந்த இரண்டாம் பாகம் 200 கோடிக்கு மேல் வசூலித்தாலும் கூட சென்சாரிலும் சரி சில மத அமைப்புகளிடமும் சரி பிரச்சனைகளை சந்தித்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே இதன் மூன்றாம் பாகமும் இருக்கிறது என்பது பற்றி பிரித்விராஜ் பேசி வந்தார்.
ஆனால் அவர் இந்த மூன்றாம் பாகத்தை கிடப்பில் போட்டு விட்டார் என்றுதான் பேசப்பட்டு வந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசும்போது, “நான் ஒருபோதும் இது போன்ற சர்ச்சைகள் காரணமாக லூசிபர் மூன்றாம் பாகத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. அதேசமயம் இந்த மூன்றாம் பாகம் உருவாக்குவதில் சவால்கள் நிறையவே இருக்கிறது. மோகன்லாலின் விலைமதிப்பற்ற நேரமும் கூட ஒரு சவால் தான். அதேபோல இன்னும் இரண்டு மூன்று படங்களை நான் முடித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதன் பிறகு லூசிபர் மூன்றாம் பாகத்திற்குள் நுழைய இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.