Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரீ ரிலீஸில் 'திரிஷ்யம் 2'வுக்கு கிடைத்த அதிர்ச்சி

15 ஏப், 2026 - 12:13 IST
எழுத்தின் அளவு:
The-shock-received-by-Drishyam-2-in-the-re-release
Advertisement


மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதன் மூன்றாம் பாகம் தற்போது தயாராகி வரும் மே 21ம் தேதி ரிலீசாக இருக்கிறது. முதலில் மார்ச் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் கேரள தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் மே 21க்கு மாற்றி வைக்கப்பட்டது. இதற்கிடையே 'திரிஷ்யம் 2' திரைப்படம் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் ஓடிடியில் தான் வெளியாகி இருந்தது என்பதால் அதன் தியேட்டர் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என தயாரிப்பு நிர்வாகம் இந்த இரண்டாம் பாகத்தை கடந்த ஏப்ரல் 10ம் தேதி ரீ ரிலீஸ் செய்தது.

ரசிகர்கள் ஆர்வமுடன் வருவார்கள் என எதிர்பார்த்த தயாரிப்பு தரப்பிற்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது 'திரிஷ்யம் 2'ம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததுடன் குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே திரையரங்குக்கு வந்ததால் தியேட்டருக்கான கட்டணத் தொகையை ஈடு கட்டுவதில் கூட 'திரிஷ்யம் 2' சிரமத்தை சந்தித்துள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் 'திரிஷ்யம் 3' வெளியாக உள்ள நிலையில் 'திரிஷ்யம் 2' இப்படி ஒரு மோசமான வரவேற்பு கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் திரிஷ்யம் 2 ஏற்கனவே ஓடிடியில் வெளியானதால் அந்த படத்தை அனைவரும் பார்த்து விட்டார்கள் என்பதும் மீண்டும் திரையரங்கில் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கமர்சியல் கன்டென்ட் இல்லை என்பதாலும் அடுத்த மாதமே 'திரிஷ்யம் 3' வருவதால் எதற்காக மீண்டும் இரண்டாம் பாகத்தை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கலாம் என்பதாலும் இந்த இரண்டாம் பாகம் ரீ ரிலீஸில் வரவேற்பை பெற முடியாமல் போய்விட்டது என்றே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'டிராகன்' படத்திற்காக உடலை மெருகேற்றிய ஜூனியர் என்டிஆர்'டிராகன்' படத்திற்காக உடலை ... 'வாழ 2' வெற்றியை தொடர்ந்து 'வாழ 3' உடனடி அறிவிப்பு 'வாழ 2' வெற்றியை தொடர்ந்து 'வாழ 3' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap