மறக்க முடியுமா? - பார்த்தாலே பரவசம்
ஜன 19, 2021
Advertisement
படம் : பார்த்தாலே பரவசம்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : மாதவன், சிம்ரன், சினேகா, ராகவா லாரன்ஸ்
இயக்கம் : கே.பாலசந்தர்
தயாரிப்பு : கவிதாலயா
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின், 100வது படம், பார்த்தாலே பரவசம். மாதவன், சிம்ரன், சினேகா, ராகவா லாரன்ஸ், வாலி, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, ராதிகா சவுத்ரி, சமுத்திரக்கனி என, நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்தனர். கமல், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், கலவையான விமர்சனங்களையும், வசூலில் தோல்வியையும் பெற்றது.
மருத்துவரான மாதவன், சிம்ரனை திருமணம் செய்து கொள்கிறார். மாதவனின் கடந்த கால வரலாறு, இருவரையும் பிரித்து, விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது. இதை தொடர்ந்து மாதவனை, அவரது மருத்துவமனையில் பணிபுரியும் சினேகா விரும்புகிறார். சிம்ரனை, நடனக் கலைஞரான ராகவா லாரன்ஸ் விரும்புகிறார். இரு ஜோடிகளின் திருமணமும், ஒரே தேதியில் நடக்கவிருக்கிறது. சில உண்மைகள் தெரிய வர யார் யாருடன் இணைந்தனர் என்பது தான், படத்தின் கிளைமேக்ஸ்.
பெண்கள் விரும்பும் டாக்டராக மாதவன், அந்த கதாபாத்திரத்திற்கு ஏக பொருத்தமாக இருந்தார். சிம்ரனின் நடிப்பு, மெருகேறி இருந்தது. இதை தவிர, படத்தில் இடம்பெற்ற அத்தனை கதாபாத்திரங்களுக்கும், ஏதாவது ஒரு, "டச்" கொடுத்து படத்தை இயக்கியிருந்தார், பாலசந்தர்.
ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவில், அவ்வளவு புத்துணர்ச்சி இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், "லவ் செக், நாதிர் தின்னா, அழகே சுகமா, அன்பே நீ என் தேசிய, ராத்தியின் சொந்தக்காரா..." பாடல்கள் ரசிக்க வைத்தன. தமிழ் சினிமாவில், 100வது படம் பலருக்கு வெற்றி தரவில்லை. அந்த பட்டியலில், கே.பாலசந்தரும் இணைந்தார்.
பார்த்தாலே பரவசம் தரவில்லை!

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!