மறக்க முடியுமா? - பார்த்திபன் கனவு
பிப் 04, 2021
Advertisement
படம் : பார்த்திபன் கனவு
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : ஸ்ரீகாந்த், சினேகா, மணிவண்ணன், விவேக்
இயக்கம் : கரு.பழனியப்பன்
தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ்
கல்கி எழுதிய, "பார்த்திபன் கனவு" நாவல், 1960ல் அதே பெயரில் படமாக வெளியானது. 2003ல், அதே தலைப்பில் படம் வெளியானது; ஆனால், கதை வேறு! கரு.பழனியப்பனின் முதல் படம் இது. அவர், திரையில் உலவ செய்த பெண் கதாபாத்திரங்கள், தனித்துவம் ஓங்கி தென்பட்டனர்.
ஸ்ரீகாந்த், சினேகாவை கண்டதும் காதலில் விழுகிறார். அதே நேரம், ஸ்ரீகாந்திற்கு, அவரது பெற்றோர் பார்த்திருக்கும் பெண்ணாக, சினேகா இருக்கிறார். இதனால் மகிழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளும் ஸ்ரீகாந்திற்கு, தான் காதலித்த பெண் வேறு; மனைவியாக உள்ள பெண் வேறு என்ற உண்மை தெரிய வருகிறது. உருவ ஒற்றுமையால் நடந்த குழப்பத்தால், ஸ்ரீகாந்த் தவிக்கிறார். அதன் முடிவு என்ன என்பதை, சுவாரஸ்யமாக திரைக்கதையாக்கி இருந்தார், கரு.பழனியப்பன்.
சத்யா, ஜனனி என, இரட்டை கதாபாத்திரத்தில் சினேகா அற்புதமாக நடித்திருந்தார். இக்கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர், ஜோதிகா. அவரின் கால்ஷீட் கிடைக்காததால், சினேகா நடித்தார். இப்படம், தமிழக அரசின், ஏழு விருதுகளை பெற்றது.
வித்யாசாகர் இசையில், "கனாக் கண்டேனடி, தீராத தம் வேண்டும், பக் பக் நெஞ்சில் மாடப்புறா, என்ன தவம் செய்தனை, ஆலங்குயில், வாடி மச்சினியே..." பாடல்கள் ரசிக்க வைத்தன. ஒவ்வொரு வார்த்தைக்கும், பாடல் மூலம் விளக்கம்; மூன்று கால கட்டத்தில் நிகழும் நடனம் என, பாடல் படமாக்கப்பட்ட விதமும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம், அம்மாயி பாகுந்தி என, தெலுங்கில், "ரீமேக்" செய்யப்பட்டது. மஞ்சு பெய்யும் முன்பே எனும் பெயரில், மலையாளத்தில், மொழிமாற்றம் செய்யப்பட்டது.
வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்தது, பார்த்திபன் கனவு!

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!