
என்ன இப்படி ஆரம்பிச்சுட்டாங்க... : நிர்வாண மோகத்தில் நடிகர், நடிகைகள்
"ஆடை" படத்தில் நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்து, பலரையும் அதிர வைத்தார். படத்தின் முக்கால்வாசி காட்சிகள் நிர்வாணமாகவே நடித்திருந்தார். அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒரு பாடலில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு ஆடை இன்றி நிர்வாணமான கடல் கன்னியாகவும் போஸ் கொடுத்திருந்தார் ஆண்ட்ரியா.
இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகள் அடங்குவதற்குள் விரைவில் வெளிவர உள்ள "பிசாசு 2" படத்திலும், ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார். பிசாசு 2 படத்தின் கதையைக் கேட்டபோது 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என இயக்குநர் தெரிவித்ததாகவும், அதில் தனக்கு அப்போது உடன்பாடில்லை எனவும் கூறிய ஆண்ட்ரியா, கதை தரமானதாக இருந்ததால், இயக்குநரின் கட்டாயத்தின் பேரில் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் வெளிவந்த "இரவின் நிழல்" படத்தில், நடிகையர் பிரகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோரும் நிர்வாணம் மற்றும் அரை நிர்வாணத்தில் நடித்திருந்தனர். இப்படியாக கதைக்கு அவசியம் என கூறப்பட்டு, நடிகர், நடிகையர் விரும்பியோ, கட்டாயப்படுத்தப்பட்டோ நடிக்க வைக்கப்படுகின்றனர்.
படத்தில் தான் கதைக்கு அவசியம் என கூறினாலும், தற்போது நடிகர்களே பப்ளிசிட்டிக்காக நிர்வாண போட்டோஷூட் கொடுத்து வரும் கலாசாரத்திற்கு மாறியுள்ளனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஆங்கில இதழ் ஒன்றுக்கு நிர்வாணமாக "போஸ்" கொடுத்திருந்தார். அந்த படங்களை பகிர்ந்ததுடன், "இதனால் நான் அசிங்கப்படவில்லை. பார்ப்பவர்களுக்கு தான் தர்மசங்கடமாக இருக்கும்" என்றும், அவர் கூறியிருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகை கிரணும் நிர்வாண போஸ் கொடுத்து, அதை சோசியல் மீடியாவில் பதிவேற்றினார்.
இந்த நிலையில், தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் அரை நிர்வாணத்தில் போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், "நானும் டிரெண்டிங்கில் இணைகிறேன். என் மனைவி ஜுவாலா கட்டா தற்போது போட்டோகிராபராகவும் மாறியுள்ளார்" என, பதிவிட்டுள்ளார்.
‛‛ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றெல்லாம்"" நாம் ரொம்ப யோசிக்க வேண்டாம். எல்லாம் "பப்ளிசிட்டி"க்காகத் தான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!