
5 கோடி மக்கள் பார்த்த கேஜிஎப் 2 : இந்திய அளவில் எது டாப் தெரியுமா...?
140 கோடி மக்களுக்காக, சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள், 1000க்கும் மேற்பட்ட படங்கள் ஒவ்வொரு வருடமும் வெளிவந்தாலும் 10 கோடி மக்கள் மட்டுமே தியேட்டர்களுக்குப் படங்கள் பார்க்கச் செல்லலாம். மக்கள் தொகையில் பாதி பேர் தியேட்டர்களுக்கு வந்தால் கூட இந்தியத் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி வருவாயை ஈட்டும். சினிமா சார்ந்த பிற தொழில்கள் மூலமும் அதிக வருவாய் கிடைக்கும்.
இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த படமாக "கேஜிஎப் 2" படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்போது வரை இந்தப் படம் 1170 கோடி வரை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்திய அளவில் 10 கோடி மக்கள் பார்த்த படமாக "பாகுபலி 2" படம் தான் நூறாண்டு கால இந்திய சினிமாவில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் 8 கோடி மக்கள் பார்த்த "கடார்" படம் உள்ளது. "கேஜிஎப் 2" மூன்றாவது இடத்திலும், 4.9 கோடி மக்கள் பார்த்த "பாகுபலி" முதல் பாகம் நான்காவது இடத்தில் உள்ளது. 5வது இடத்தை "ஆர்ஆர்ஆர்" படத்தை 4 கோடியே 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
"கேஜிஎப் 2" படம் இந்த வார இறுதி வரை தியேட்டர்களில் வரவேற்புடன் ஓட வாய்ப்புள்ளது. இதன் மூலம் 1200 கோடி வசூலை இப்படம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!