இந்தியா சார்பாக ஆஸ்கர் அடிக்குமா கோந்தல்? : படத்தில் அப்படி என்ன ஸ்பெஷ்!
நவ 17, 2026
Advertisement
சரியாக ஒரு வருடத்துக்கு முன்பே மகாராஷ்டிராவில் ரிலீஸாகி சுமாரான வரவேற்பையே பெற்ற மராத்திப் படமான "கோந்தல்" கடந்த வெள்ளியன்று தமிழ் உட்பட 6 மொழிகளில், பான் இந்தியா படமாக ரீ ரிலீஸ் ஆகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்குக் காரணம் இப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் பட்டியலில் சர்வதேச விருது பிரிவில் தேர்வாகியிருப்பது.
எதிர்பார்ப்பு
இந்திய சினிமாவுக்கு உலக அளவில் மிகப்பெரிய வரலாறும், பல மொழிகளில் சிறந்த திரைப்படங்களும் இருந்தாலும், ஆஸ்கரின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இந்தியா இதுவரை விருதை வென்றதில்லை. இந்த சர்வதேசப் பிரிவில் இதற்கு முன்னர் இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட "மதர் இந்தியா", "சலாம் பாம்பே", "லகான்" உள்ளிட்ட படங்களும் தமிழில் பரிசீலிக்கப்பட்ட தெய்வமகன், நாயகன், அஞ்சலி, தேவர் மகன், குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ், ஹே ராம், விசாரணை, கூழாங்கல் ஆகிய படங்களும் அடக்கம். இந்த தோல்விகளின் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த கோந்தலாவது விருதை வென்று இந்தியாவின் மானம் காக்குமா என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.
எளிதல்ல
ஆனால் ஒரு முக்கியமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாகத் தேர்வு செய்யப்படுவது வேறு; இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் (Nominees) இடம்பிடிப்பது வேறு; விருதையே வெல்வது என்பது அதற்கடுத்த கட்டம். ஆஸ்கரை நோக்கிய அந்தப் பயணம், புரியும்படி எளிய தமிழில் சொல்வதானால், அது ஒரு இடியாப்பச் சிக்கலேதான். அந்த பயணத்தில் இருக்கிற இந்த "கோந்தல்" கார்த்திக் சுப்பாராஜின் "டோரதி" உள்ளிட்ட 33 திரைப்படங்களிலிருந்து 2026 செப்டம்பர் 18 அன்று இந்தியாவின் அதிகாரப்பூர்வப் படமாகத் தேர்வு செய்யப்பட்டது.
இனி இது பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பட்டியலில் 15 படங்களுக்குள் ஒன்றாக தேர்வாக வேண்டும். அடுத்த க்ளைமேக்ஸுக்கு முந்தைய பயணத்தில் 5 படங்களுக்குள் ஒன்றாக இடம் பிடிக்க வேண்டும். இறுதியாக அந்த 5 படங்களில் ஒன்றுக்கு விருது வழங்கப்படும். இப்படி இந்த இறுதி 5கள் பட்டியலில் இதுவரை ஒரு இந்தியப் படம் கூட இடம் பிடித்ததில்லை. தீபா மேத்தாவின் Water (2005) திரைப்படம் ஆஸ்கரின் இறுதிப் பரிந்துரையில் இடம்பெற்றது. ஆனால் அது இந்தியாவின் சார்பில் அல்ல; கனடாவின் சார்பில் போட்டியிட்டது.
ராஜாவைத் தேடி
கோந்தலுக்கு வருவோம். சந்தோஷ் டாவ்கர் இயக்கியுள்ள இப்படம் சரியாக 2 மணி நேரம் ஓடுகிறது. கிஷோர் கதம், இஷிதா தேஷ்முக், யோகேஷ் சோஹோனி, நிஷாத் போயர் ஆகிய மராத்திய கலைஞர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்க இசையமைத்திருப்பவர் நம் இளையராஜா. மகாராஷ்டிராவிலிருந்து நம்ம ராஜாவைத் தேடி இயக்குநர் ஏன் கோடம்பாக்கம் வரை வந்தார்? காரணம் கதை ராஜாவைத்தான் தேடியது.
மகாராஷ்டிராவின் பாரம்பரியமான "கோந்தல்" சடங்கு, நாட்டுப்புற இசை, நடனம் ஆகியவற்றின் பின்னணியில் ஒரு பெண்ணின் காதல், திருமண வாழ்க்கை, ஆசை, ஏமாற்றம், உயிர் பிழைத்தல் ஆகியவற்றைப் பேசும் உளவியல் த்ரில்லர் கதை இது. இக்கதைக்கு ராஜாவின் இசைதான் உயிர்கொடுக்க முடியும் என்று தீர்க்கமாக நம்பினேன். அதை 100 சதவிகிதம் நிறைவேற்றித் தந்தார். கதை நடக்கும் பகுதிக்கே வந்து இரு தினங்கள் தங்கியிருந்து மராத்திய மண் மணக்கும் இசை தந்தார் ராஜா” என்று பேட்டிகள்தோறும் சிலாகிக்கிறார் சந்தோஷ் டாவ்கர்.
பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு
ராஜாவுக்கு அடுத்தபடியாக இப்படத்தின் இரண்டாவது கதாநாயகனாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் அமலேந்து சவுத்ரி (Amalendu Chaudhary ISC). இருள், நெருப்பு, இயற்கையான வெளிச்சம், கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றை அவர் காட்சிப்படுத்திய விதம் சர்வதேசத் திரைப்பட விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
மிக முக்கியமாக 25 நிமிடங்கள் நீளக்கூடிய இப்படத்தின் துவக்கக் காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டது, பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. படம் முழுக்க செயற்கை வெளிச்சங்கள் எதையும் பயன்படுத்தாமல் கதையில் இடம் பெறும் மெழுகுவர்த்தி மற்றும் தீபந்தம் வெளிச்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
கதை எப்படி
இப்படி பலம் பொருந்திய ஒலி, ஒளிகளோடு இயக்குநர் சந்தோஷ் கையிலெடுத்த கதை ஒன்றும் அவ்வளவு லேசுப்பட்டதல்ல. கதையை ஒன்லைனில் சொல்வதானால் கடவுள் பாதி… மிருகம் பாதியேதான். நாயகன், நாயகியின் திருமணத்தை ஒட்டி முந்தைய நாள் இரவு முழுக்க நடக்கும் பாரம்பரிய கலை விழா. அவ்விழாவில் மனிதர்களின் நம்பிக்கைகள், காதல், காமம், துரோகம் என அனைத்தையும் கட்டவிழ்க்கிறார் சந்தோஷ்.
மந்தமாக நகரும் முதல் பாதி முழுக்க கோந்தல் கலை மிக நிதானமான ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இடைவேளைக்குப் பின்னர் சூடுபிடிக்கும் படம் பல திடுக் திருப்பங்களுடன் ரசிகர்களை சீட்டு நுனிக்குக் கொண்டு வருகிறது.
நாயகி தான் டாப்
படத்தில் வரும் அத்தனை கலைஞர்களும் மிக நேர்த்தியான பங்களிப்பை அளித்திருந்தாலும் உச்சம் தொடுபவர் கதை நாயகியாக வரும் இஷிதா தான். கிராமப்புறத்தில் பெண்கள் கடுமையான அடக்குமுறையில் வாழும் சூழலில், தனது காதலுக்காக எதையும் எதிர்கொள்ள தயாராகிவிட்ட, துணிச்சலான, திட்டங்களை தீட்டும் சூத்திரதாரியாக, இறுதிவரை சமூக கட்டமைப்பை எதிர்த்து போராடும் மணமகள் சுமனாக, இஷிதா ஒட்டுமொத்த கதையையும் தன் வசப்படுத்துகிறார்.
ஆனால் இதே இஷிதாவை கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால், சர்வதேச பார்வைக்கு பரிமாறப்படுகிற, மிக மோசமான இந்தியப் பெண்ணின் அடையாளமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. காதலுக்காக தன் பெற்றோரை உதாசீனம் செய்வது, நம்பி தாலி கட்டக் காத்திருக்கும் கணவனையே கொலை செய்ய திட்டம் தீட்டுவது, காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக ஊர்த் தலைவர் மகனுக்கே காம வலை விரிப்பது என்று வில்லத்தனத்தின் உச்சமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் படத்தை சுவாரசியப்படுத்தியிருப்பதும் நாயகியின் இந்த கள்ளத்தனம் தான். அந்தக் கள்ளச்சிரிப்பு ஆஸ்கர் அடிக்குமா என்பதை 2027 மார்ச் 14 அன்று நடைபெறவுள்ள 99வது ஆஸ்கார் விழா வரை காத்திருந்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…