அடுத்தடுத்து முடிவுக்கு வரும் இரண்டு சீரியல்கள்
மே 06, 2022
Advertisement
சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி அதில் வெற்றி கண்டு வருகிறது ஜீ தமிழ். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற இரண்டு சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளது.
மதியம் நேரம் ஒளிபரப்பாகி வந்த "என்றென்றும் புன்னகை" தொடர் நாளை சனிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இந்த தொடரில் நக்ஷத்திரா, கவிதா, விஷ்ணுகாந்த், நிதின் ஐயர், சுஷ்மா நாயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதேபோல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் "கோகுலத்தில் சீதை" தொடரும் வருகிற 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆஷா கௌடா, நந்த கோபால் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர்.
ஹிட் தொடர்கள் இரண்டும் அடுத்தடுத்த முடிவுக்கு வரவுள்ள நிலையில், இவற்றின் வெற்றிடத்தை புது சீரியல்கள் நிரப்புமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுத்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!