
முன்னணி சீரியலில் ஹீரோயினாகும் நிவிஷா
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் புடவைகளில் போடும் போட்டோஷூட்களுக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. புடவையில் செதுக்கி வைத்த சிலை போல் இருக்கும் இவரை பார்த்து ரசிகர்கள் தங்கள் காதலை கொட்டித்தீர்ப்பார்கள்.
இந்நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அம்மன் தொடரில் நடித்து வந்த நடிகை சீரியலை விட்டு விலக, அதில் அம்மனாக (கதாநாயகியாக) நிவிஷா நடிக்கிறார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட நிவிஷாவுக்கு ரசிகர்கள் "ஒரு சிலை அம்மனாக மாறுகிறது" என கமெண்டுகளுடன் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!