
தயாராகிறது குக் வித் கோமாளி சீசன் 3
குக் வித் கோமாளியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார், உமா ரியாஸ், ரேகா, பாலாஜி, ரம்யா பாண்டியன் உட்பட பலர் போட்டியாளர்களாக இருந்தனர். இவர்களுடன் கோமாளிகளாக புகழ், பாலா,மணிமேகலை, ஷிவாங்கி இருந்தனர். தாமு மற்றும் வெங்கடேஷன் செப்பாக இருந்தார்கள்.
தொடர்ந்து 2வது சீசன் ஒளிபரப்பானது. இதில், ஷகிலா, தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, பாபா பாஸ்கர், தீபா, மதுரை முத்து, அஸ்வின் என பலர் இடம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி மற்றும் அஸ்வின் கலாட்டா மிகவும் வைரலானது. சமீபத்தில் 2வது சீசன் நிறைவடைந்தது.
3வது சீசன் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பை முதல் இரண்டு சீசன்களும் ஏற்படுத்தி விட்டது. தற்போது மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பிசியாக இருக்கும் சேனல், அதற்கு பிறகு பிக் பாஸ் புதிய சீசனை தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் குக் வித் கோமாளி 3வது சீசனுக்கான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
இரண்டாவது சீசனில் மக்களின் கவனத்தை ஈர்த்த, புகழும், ஷிவாங்கியும் செப் தாமுவும் 3வது சீசனில் தொடர்வார்கள் என்று தெரிகிறது. மற்றவர்கள் புதியவர்களாக இருப்பார்கள். யாரும் எதிர்பாராத வகையில் ஒரு திரைப்பட நட்சத்திரமும் 3வது சீசனில் இணைகிறார். 3வது சீசன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!