
அவினாஷ், ஐஸ்வர்யா நடிக்கும் ஆனந்தி
ஆனந்தி (ஐஸ்வர்யா)மற்றும் வருணின் (அவினாஷ்) ஆகியோரின் முழுமையான காதல் கதை. தந்தை இல்லாத குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டிய ஆனந்தி, வருணைக் காதலிக்கிறாள். இரு குடும்பங்களிலும் நிலவும் பிரச்சினைகளைத் தாண்டி, இருவரின் காதலும் வெற்றி பெற பல தடைகள் உள்ளன. அனைத்து தடைகளையும் உடைத்து காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை.
குடும்ப செண்டிமென்ட் நிறைந்த இளமை ததும்பும் காதல் கதை. கடந்த திங்கள் முதல் (ஏப்ரல் 19) ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!