
சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா
கனிகா விலகியதற்கான காரணத்தை அவரும் சொல்லவில்லை, தயாரிப்பு தரப்பும் சொல்லவில்லை. இதனால் பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டது. இதற்கிடையில் தயாரிப்பு தரப்பு மீண்டும் கனிகாவை அழைத்து வர முயற்சித்தது, அதுவும் நடக்கவில்லை. கனிகா தற்போது இன்னொரு சேனல் நடத்தும் நிகழ்ச்சிக்கு நடுவராக சென்று விட்டார்.
இந்த நிலையில் கனிகா நடித்து வந்த ஈஸ்வரி கேரக்டரில் ஸ்ரீஜா நடித்து வருகிறார். "பொம்மலாட்டம்" உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் இவர். இவர் நடித்த எபிசோட்கள் வரும் வாரங்களில் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. கனிகா இடத்தை ஸ்ரீஜா பிடிப்பாரா என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்து விடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!