
நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல்
இந்த நிலையில் திடீர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஸ்ருதிகா அர்ஜூன் டிவி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி உள்ளார். கண்கள் வீங்கிய நிலையில் இருக்கும் தனது படத்தை வெளியிட்டு, இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் “இது கண் நோய் அல்லது மெட்ராஜ் ஐ இல்லை. எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளது. அதிக காய்ச்சலால் அவதிப்படுகிறேன். இதனால் கண்களில் தொற்று ஏற்பட்டு கண்கள் வீங்கி காணப்படுகின்றன. கண்களை திறக்க கூட முடியவில்லை. அது போல் வயிற்றிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. வயிறும் வீங்கியுள்ளது. தற்போது அவரது உடல்நிலை மெல்ல தேறி வருகிறது. "தி 50" ஷோவிற்கு மூன்று முதல் ஐந்து நாட்களில் திரும்பி வந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!