
பிக்பாஸ் விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம்
படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் காரணமாக 7-வது சீசன் உடன் கமல்ஹாசன் நிறுத்திக்கொண்டார். 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதற்காக அவர் 60 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய்சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னர் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்கு ஒவ்வொரு சீசனுக்கும் 100 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறுவார்கள்.
இதே நிகழ்ச்சியை மலையாளத்தில் தொகுத்து வழங்கும் மோகன்லால் 50 கோடியும், தெலுங்கில் தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா 75 கோடியும், ஹிந்தியில் தொகுத்து வழங்கும் சல்மான்கான் 200 கோடியும் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!