
சரோஜினி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் குஷ்பூ!
டிச 15, 2024
Advertisement
தமிழில் கடைசியாக ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்த குஷ்பூ, அதன் பிறகு தனது கணவர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை-4 படத்தில் அம்மன் பாடலில் தோன்றியிருந்தார். மேலும் சின்னத்திரையில் அர்த்தமுள்ள உறவுகள், மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி, நந்தினி, ரோஜா என பல தொடர்களில் நடித்துள்ள குஷ்பூ, 2022ம் ஆண்டில் கலர் தமிழ் சேனலில் வெளியான மீரா என்ற தொடரில் நடித்ததோடு ரைட்டர் ஆகவும் பணியாற்றினார். இந்த நிலையில் தற்போது டிடி தொலைக்காட்சியில் வெளியாக உள்ள சரோஜினி என்ற தொடரில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் குஷ்பூ. சமீபத்தில் இந்த தொடருக்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!