
மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகழ்
செப் 28, 2024
Advertisement
சின்னத்திரை நகைச்சுவை கலைஞரான புகழ் ‛குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவருக்கு பென்சி என்பவருடன் திருமணம் முடிந்த நிலையில், ரித்தான்யா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. நேற்றைய தினம் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகழ், ‛என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ. நீ வந்த நாளில் இருந்து எங்கள் வாழ்க்கை வசந்தமாய் மாறியது. முதன் முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியதை என்னால் மறக்கவே முடியாது. இனி வரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்கப்போகிறோம். மகளாய் வந்துள்ள மகாராணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!