7 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் டெல்னா டேவிஸ்
Advertisement
Advertisement
7 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் டெல்னா டேவிஸ்
ஜூலை 11, 2024
அ நிறம் | அளவு
Advertisement
வெள்ளித்திரை நடிகையான டெல்னா டேவிஸ் தமிழ் சினிமாவில் குரங்கு பொம்மை படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனாலும், அதன்பிறகு திரைப்படங்கள் எதிலும் அவர் நடிக்கவில்லை. பிறகு டிவியில் அன்பே வா தொடரில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அந்த சமயம் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் நடிப்பதை விட சீரியலில் நடிப்பது தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சினிமாவில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், அன்பே வா சீரியலிலிருந்து விலகிய டெல்னா டேவிஸ் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு "லவ் இங்" என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த மகிழ்ச்சியினை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!