
கண்ணீருடன் விடைபெற்ற எதிர்நீச்சல் நந்தினி
அந்த வகையில் எதிர்நீச்சல் தொடரின் மூலம் பெரிய கம்பேக் கொடுத்த நடிகையானார் ஹரிப்பிரியா. அவர் நடித்த நந்தினி கேரக்டருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில் நந்தினி கேரக்டரின் புகைப்படங்களுடன் கடைசியாக நந்தினி கேரக்டருக்கு டப்பிங் பேசிய வீடியோவை ஹரிப்பிரியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹரிப்பிரியா மிகவும் எமோஷனலாகிவிட்டார். இதை பார்க்கும் ரசிகர்கள் நந்தினி கேரக்டரை மறக்கவே மாட்டோம் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு ஹரிப்பிரியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!