
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணம் என்ன? - மனம் திறக்கும் வெங்கடேஷ் பட்
அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட், "நான் விஜய் டிவியில் தொடர்ந்து 24 வருடங்களாக கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர், குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளேன். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. மீடியா மேஷன்ஸ் நிறுவனத்திற்கும் விஜய் டிவிக்கும் இடையே நடந்த பிரச்னை காரணமாக அவர்கள் சேனலை விட்டு வெளியேறினர். எனக்கு கம்போர்ட் ஷோன் அவர்கள் தான். அதனால் தான் அவர்களுடன் சேர்ந்து நானும் வெளியே வந்தேன். நான் விஜய் டிவியில் இருந்து விலகவில்லை. எனக்கும் விஜய் டிவிக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை" என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!