
நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர்
கயல், எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது விஜய் டிவி தொடரான சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்துள்ளது. இந்த தொடருக்கு கிடைக்கும் வரவேற்பால், "குண்டே நிண்டா குண்டே கண்டலு" என்ற பெயரில் தெலுங்கிலும் "செம்பன்னீர் பூவு" என்கிற பெயரில் மலையாளத்திலும் "சாதி மானசா" என்கிற பெயரில் மராத்தியிலும் "உட்னே கி ஆஷா" என்கிற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒளிபரப்பாகும் அனைத்து மொழிகளிலுமே டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!