
மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக்
ஏப் 18, 2024
Advertisement
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான ‛மிஸ்டர் மனைவி" தொடரில் ஹீரோயினாக கலக்கி வந்தார் ஷபானா. மக்கள் மத்தியில் ஷபானா நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்து வரும் நிலையில், திடீரென அவர் சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். அதேசமயம் புது அஞ்சலியாக யார் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வானத்தைப் போல சீரியலில் நடித்த தேப்ஜானி மோடக் தான் அஞ்சலியாக நடிக்கிறார். ஷபானாவுக்கு பதிலாக என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் அவரை போலவே ரசிகர்களை ஈர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!