
புதிய தொழில் தொடங்கினார் நிஷா
2018ம் ஆண்டு வெளியான "மாரி 2" படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமராஜா, ஆண் தேவதை, கலகலப்பு 2, திருச்சிற்றம்பலம், ஜெயிலர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார்.
நிஷா சுய தொழிலில் கால் பதித்துள்ளார். "நிஷா பேஷன்" என்ற பெயரில் துணிக்கடை தொடங்கி உள்ளார். “என் வீட்டின் அருகிலேயே சின்னதாக இந்த கடையை திறந்திருக்கிறேன். எனக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். ஆன்லைன் மற்றும் நேரடியாக பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
நிஷாவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!