
மொத்தமாக விலகிய கலைஞர்கள்
இந்நிலையில், மீடியா மேசன்ஸ் நிறுவனம் தற்போது விஜய் டிவியை விட்டு விலகியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறோம். விஜய் டிவியில் மட்டும் தான் நாங்கள் பணி புரிந்தோம். இது எங்களுடைய இரண்டாவது வீடு. ஆனால், இப்போது விஜய் டிவியிலிருந்து ஓய்வெடுக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது" என அதில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குக் வித் கோமாளி இயக்குநர் பார்த்திபனும் விஜய் டிவிக்கு குட் பை சொல்லியிருக்கிறார். இவ்வாறாக விஜய் டிவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு நிறுவனம் தனது கலைஞர் பட்டாளத்துடன் விஜய் டிவியை விட்டு வெளியேறியுள்ளது. இது விஜய் டிவிக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!