ரீலா, ரியலா? ரசிகர்களை குழப்பிய சாண்ட்ரா - விக்கி ஜோடி
Advertisement
Advertisement
ரீலா, ரியலா? ரசிகர்களை குழப்பிய சாண்ட்ரா - விக்கி ஜோடி
செப் 23, 2023
அ நிறம் | அளவு
Advertisement
ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் ப்ரியமான தோழி தொடரும் ஒன்று. இதில், முதன்மை கதாபாத்திரத்தில் விக்கி ரோஷன் மற்றும் சாண்ட்ரா பாபு நடித்து வருகின்றனர். சீரியல் ஆன் ஸ்கிரீனில் அடிக்கடி சண்டையிட்டு கொண்டாலும் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், விக்கியும், சாண்ட்ராவும் தங்களது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும், விக்கி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருவரது நெருக்கத்தை பார்க்கும் போது நிஜத்திலும் இவர்கள் காதலிக்கிறார்களா? என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. எனினும், இருவருமே இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!