
எதிர்நீச்சல் குணசேகரனுக்கு அடுக்கடுக்காக குவியும் சின்னத்திரை வாய்ப்பு!
இந்நிலையில், மற்ற சேனல்களும் ஆதிகுணசேகரனின் டி.ஆர்.பி மார்க்கெட்டை தங்களது சேனலுக்கு பயன்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகர் மாரிமுத்து ஜோதிடர்களுக்கு எதிராக பேசிய சர்ச்சையான கருத்து வைரலாகி அந்நிகழ்ச்சியின் டிஆர்பி எகிற செய்தது. தற்போது அதேபோல விஜய் டிவி தரப்பிலும் ஸ்டார் மியூசிக் என்ற கேம் ஷோவில் சினி அப்பாஸ் சினி அம்மாஸ் என்ற ஸ்பெஷல் எபிசோடில் நடிகர் மாரிமுத்துவை கலந்து கொள்ள செய்துள்ளனர். அதன் புரோமோவை பார்க்கும் ரசிகர்கள் "இந்த டிவியில யாரை வம்பிழுக்க வந்திருக்கீங்க குணசேகரன்?" என காமெடியாக கலாய்த்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!