
சூப்பர் சிங்கர் 9 : டைட்டில் பட்டத்தை தட்டித்தூக்கிய அருணா! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
அதேபோல் இரண்டாம் இடத்தை பிடித்த பிரியா ஜெர்சனுக்கு ரூ.10 லட்சமும், மூன்றாம் இடத்தை பிடித்த பிரசன்னாவுக்கு ரூ. 5 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி பெற்ற நபர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
டாப் 3ல் கூட இல்லையா? சோகத்தில் பூஜா ரசிகர்கள்
சூப்பர் சிங்கர் 9 இறுதிப்போட்டியில் அருணா, பிரியா ஜெர்சன் மற்றும் பிரசன்னா ஆகியோர் டாப் 3 இடத்தை பிடித்து பரிசு பெற்றுள்ளனர். ஆனால், இந்த சீசன் தொடங்கியது முதலே நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பூஜா தான். இறுதிபோட்டியில பூஜா தான் அதிக வாக்குகளுடன் டைட்டில் பட்டம் வெல்வார் என்று அவரது ரசிகர்களும் நம்பி வந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர் டாப் 3 இடத்தை கூட பிடிக்கவில்லை. இதன்காரணமாக பூஜாவின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!