
4 ஆண்டுகளுக்கு பின் சின்னத்திரையில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் வேணு அர்விந்த்!
இதுகுறித்து வேணு அர்விந்த் கூறிய போது, "நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் நடிக்க வருகிறேன். பல ஆண்டுகளுக்கு பின் ராதிகா சரத்குமாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது" என கூறியுள்ளார். கிழக்கு வாசல் தொடரில் ராதிகாவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட் ரெங்கநாதன், தினேஷ், ரேஷ்மா என பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், வேணு அர்விந்தின் எண்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!