
குட்டி பத்மினியை தரக்குறைவாக விமர்சித்த அபிராமி!
இதற்கு பதிலளித்துள்ள அபிராமி, சமூக வலைதளத்தில் குட்டி பத்மினி பேசியதை பதிவிட்டு அதற்கு கீழ், "உலகத்தில் திரையுலகில் உள்ள எல்லா பெண்களும் உங்களை போலவே இருக்கமாட்டார்கள். சினிமாவில் இருந்ததால் உங்களை ஒருவர் தொடும்போது எந்த ஒரு உணர்வும் இல்லை என்று சொல்வது வருத்தமளிக்கிறது. இன்னொரு விஷயம். உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுனா? நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும். நாங்க பாத்துக்கறோம். நீங்க உங்க ஹெல்த்த பாருங்க" என்று பதிவிட்டுள்ளார். இதில், அபிராமி தன்னை நல்ல குடும்பத்தில் பிறந்த பெண் என்றும் குட்டி பத்மினியின் பிறப்பை தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். அபிராமியின் இந்த செயலை உச்சபட்ச ஆணவம் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!