
ராகவா லாரன்ஸ் பட ஆடிஷனில் வீஜே தீபிகாவுக்கு நடந்த கொடுமை!
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் வீஜே தீபிகா சில திரைப்படங்களிலும் சிறு ரோல்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க ஆடிஷனுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே தனி ரூமில் ஒரு நபர் படத்தில் முத்த காட்சி இருப்பதாக கூறி தனக்கு முத்தம் கொடுத்து அதை நடித்துக் காட்டுமாறு கூறியுள்ளார். உடனே, தீபிகா அந்த ரோலில் நடிக்க முடியாது வேறு ரோல் கொடுக்க சொல்லி கேட்க, "உனக்கு முன்னால் வந்த 8 பேர் கிஸ் பண்ணிட்டு போயிருக்காங்க. உனக்கு மட்டும் கிஸ் கொடுக்க முடியாதா?" என்று கேட்டுள்ளார்.
இதனால் அந்த படத்தின் வாய்ப்பை உதறி தள்ளியதாக வீஜே தீபிகா கூறியுள்ளார். நடிகைகள் இப்படி வரிசையாக அட்ஜெஸ்மென்ட் டார்ச்சர் பற்றி கூறி வருவது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு தக்க நடவடிக்கை எடுத்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!