
ரிஜக்ட் செய்த ஷோவுக்கே சிறப்பு விருந்தினர்களாக சென்ற சாம் சி.எஸ், ஆர்.ஜே.பாலாஜி
அப்போது பேசிய சாம் சி.எஸ். 2008ம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் தேர்வில் தான் கலந்து கொண்டதையும் ரிஜக்ட் செய்யப்பட்டதையும் கூறினார். மேலும், "சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தோல்வியடைந்த ஒருவர் தன்னிடம் வந்து புலம்பும் போது, நீ வெற்றி பெற்றால் பாடகர் ஆகலாம். தோல்வியடைந்தால் என்னை போல் கம்போஸர் ஆகலாம்" என அட்வைஸ் செய்ததையும் அந்த மேடையிலேயே கூறினார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.
சாம் சி.எஸ். போலவே ஆர்.ஜே. பாலாஜியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரிஜக்ட் செய்யப்பட்டவர் தான். ஆர்.ஜே.பாலாஜி இன்று ரேடியோ ஜாக்கி, ஆங்கர், நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமையுடன் புகழின் உச்சத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!