
சோஷியல் மீடியா சர்ச்சையில் மாரிமுத்து : தந்தைக்காக மகன் விளக்கம்
இதனை வைத்துக்கொண்டு சிலர், அவரை வசைபாட ஆரம்பித்தனர். அதன்பிறகு சில மணிநேரங்களிலேயே அந்த அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டது. இதனால் திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நன்மதிப்பை பெற்ற நடிகரான மாரிமுத்து இதை உண்மையிலேயே செய்தாரா? என ரசிகர்கள் பலரும் குழம்பி போயிருந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மாரிமுத்துவின் மகன் அகிலன் மாரிமுத்து விளக்கமளித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், தந்தையின் (மாரிமுத்து) உண்மையான டுவிட்டர் அக்கவுண்டை டேக் செய்து, "எனது தந்தையின் மொபைல் எண்ணை பதிவிட்ட அந்த அக்கவுண்ட் போலியானது. என் தந்தையனுடையது அல்ல. அவரது செல்போன் எண் பொதுத்தளத்திற்கு எப்படியோ பரவிவிட்டது. அதை சிலர் தவறாக உபயோகித்துள்ளனர்" என்று குறிப்பிட்டு, தவறான செய்திகளை நீக்கமாறு கேட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!