
அதிக எதிர்பார்ப்பில் ராதிகாவின் கம்பேக் சீரியல்!
இந்நிலையில், ராதிகா புதிதாக தயாரிக்கவுள்ள சீரியலில் "பூவே பூச்சுடவா", "அபிடெய்லர்" தொடர்களின் மூலம் பிரபலமான ரேஷ்மா முரளிதரன் மற்றும் "ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி" 1&2-வில் நடித்த அஸ்வினி ஆகியோர் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளனர். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய ரோலில் நடிப்பதுடன் ராதிகாவும் நடிக்கிறார். இந்த சீரியலானது, தமிழின் சூப்பர்ஹிட் குடும்ப படமான "சம்சாரம் அது மின்சாரம்" படத்தின் தழுவலாக "கிழக்கு வாசல்" என்ற டைட்டிலுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ராதிகாவின் இந்த புதிய சீரியல் ரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!