
தனது சீரியல் நடிகர்களுக்கு விருந்து வைத்த இயக்குநர்
பிப் 14, 2023
Advertisement
தனியார் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் "எதிர்நீச்சல்" சீரியல் விமர்சன ரீதியிலும் தரமான சீரியல் என்ற நற்பெயரை பெற்றுள்ளது. அதேசமயம் பெண்களை இன்னும் அடிமைப்படுத்துவதாக சீரியலில் காட்டப்படுகிறது என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதையும் மீறி டிஆர்பியில் இடம்பிடித்து வரும் சீரியல்களுக்கு மத்தியில் சமூகபார்வையோடு எதார்த்தமான கதைக்களத்தில் மீண்டும் ஒரு தரமான சீரியலை தந்துள்ளார் இயக்குநர் திருசெல்வம் என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதில் நடித்து வரும் நடிகர்களும் போட்டிபோட்டுக் கொண்டு காட்சிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், எதிர்நீச்சல் குடும்பத்திற்கு அதாவது அதில் நடித்து வரும் நடிகர்களுக்கு இயக்குநர் திருசெல்வம் ஹோட்டலில் ட்ரீட் வைத்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் கமலேஷ் தனது சோஷியல் மீடியாவில் பகிர ரசிகர்கள் தங்களது அன்பை அக்குடும்பத்தினருக்கு வெளிப்படுத்தி வருகின்றனர்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!