
கமல் எனக்கு தந்தை போன்றவர் : அசீம் அந்தர்பல்டி
பிக்பாஸ் வீட்டில் அசீம் கோபப்படும்போதும், தவறான செயல்கள் செய்யும் போதும் கமல்ஹாசன் "அசீம் உங்கள் மகன் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்று சொல்லி தான் அட்வைஸ் செய்வார். இந்நிலையில், அசீமின் இந்த பேச்சு கமலுக்கு எதிராக இருப்பதாக பலரும் சோஷியல் மீடியாக்களில் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
விஷயம் பெரிதாவை புரிந்து கொண்ட அசீம், வழக்கம் போல் சரண்டர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கமல் எனக்கு தந்தை போன்றவர். நான் ஆடியன்ஸுக்கு சொன்னதை சிலர் கமல் சாரை சொன்னதாக தவறாக பரப்பி வருகிறார்கள். கமல்சாரை நான் மிகவும் மதிக்கிறேன். எனவே, தேவையில்லாமல் வதந்திகளை பரப்பாதீர்கள்" என்று கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!