
விஜய் ஸ்டைலிலேயே குத்தாட்டம் போட்ட சாண்டி, சில்வியா! வைரலாகும் டான்ஸ் வீடியோ
அந்த வகையில் சாண்டி மாஸ்டர் மச்சினிச்சி சில்வியாவுடன் சேர்ந்து கொண்டு நடிகர் விஜய்யின் சூப்பர்ஹிட் மெலோடி பாடலான "சொல்லாமலே யார் பார்த்தது" பாடலுக்கு பல பாடல்களில் விஜய் ஆடிய சிக்னேச்சர் ஸ்டெப்புகளையே ஸ்டைலாக போட்டு சூப்பரான நடன வீடியோவை வெளியிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படத்தின் முக்கிய பாடல்களான "அரபிக்குத்து" மற்றும் "ரஞ்சிதமே" பாடல்களுக்கு கொரியோகிராபி சரியில்லை. சாண்டி மாஸ்டரையே கொரியோகிராபராக போட்டிருக்கலாம் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் பேசி வந்தனர். அதை நிரூபிப்பது போல் சாண்டி மாஸ்டர் நடன வீடியோ உள்ளது. மேலும், தளபதி 67 படத்தில் சாண்டி மாஸ்டர் ஏற்கனவே நடிகராக கமிட்டாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!