
புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஜா சீரியல் நாயகி
ஜன 23, 2023
Advertisement
நடிகை ப்ரியங்கா நல்காரி "ரோஜா" சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக வலம் வருகிறார். ரோஜா தொடர் முடிவடைந்ததையடுத்து ப்ரியங்கா நல்காரியின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்த எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ப்ரியங்கா நல்காரி ஜீ தமிழில் "சீதா ராமன்" என்ற புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. "சீதா ராமா" என்கிற கன்னட சீரியலின் ரீமேக்காக தமிழில் உருவாகவுள்ள இந்த தொடரில் நாயகியாக ப்ரியங்கா நல்காரியும் அவருக்கு ஜோடியாக விஜய் டிவியின் "சிப்பிக்குள் முத்து" தொடரின் மூலம் பிரபலமான ஜெய் டிசவுசாவும் நடிக்கின்றனர்.
Tags
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!