
பிக்பாஸிருந்து வெளியேறிய ரச்சிதாவுக்கு அமோக வரவேற்பு
இந்நிலையில், வெளியே வந்துள்ள ரச்சிதாவுக்கு நண்பர்களும் ரசிகர்களும் சேர்ந்து ஏகபோக வரவேற்பை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு ரச்சிதா வருகையில் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து ஆளுயர ரோஜாப்பூமாலையும் அணிவித்து வரவேற்றுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களால் அவரது வீட்டையும் அலங்கரித்து, மக்களின் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். மேலும், ரச்சிதாவை பற்றி "அவள் ஒரு சபிக்கப்பட்ட தேவதை" என்ற அழகிய கவிதையையும் பதிவிட்டுள்ளனர். இவையனைத்தும் அழகிய வீடியோவாக தொகுக்கப்பட்டு "வா தலைவி வா" என பில்டப் சாங்குடன் வெளியாகி ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இதைபார்க்கும் சிலர் "ரச்சிதா எப்படி என்ன சாதிச்சிட்டாங்கன்னு இவ்வளவு பில்டப்பு?" என கேட்டு வந்தாலும், ரசிகர்களோ ரச்சிதாவை கொண்டாடி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!