
ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பேன் - அர்ச்சனா
சமீபத்தில் தரண் குமார் இசையில் வெளியிட்ட ஒரு நிமிடப் பாடலான “தமாத்துண்டு”எனும் ஆல்பத்தில் நடித்தார். தற்போது சினிமாவிற்கு வந்திருக்கிறார். அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதியின் தங்கையாக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் ஒரு தமிழ்ப் பெண். இயக்குநர்கள் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு திரைத்துறையில் சிறந்த கதாநாயகியாக வலம் வரவேண்டும் என்பதே ஆசை. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பேன் என்கிறார் அர்ச்சனா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!