
செல்லம்மா சீரியலிலிருந்து விலகிய திவ்யா கணேஷ்
சின்னத்திரையிலோ, சினிமாவிலோ திவ்யா விரைவில் ஹீரோயினாக கால்பதிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், திவ்யா கணேஷ் திடீரென "செல்லம்மா" சீரியலிலிருந்து விலகியுள்ள செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லம்மா தொடரில் இதுவரை அவர் நடித்து வந்த மேகா கதாபாத்திரத்தில் தற்போது ஆர்யாவின் "எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஸ்ரியா சுரேந்திரன் நடித்து வருகிறார்.
செல்லம்மா தொடரின் நாயகன் "அர்னவ்" குடும்ப பிரச்னையில் சிக்கி சிறை சென்று வந்ததிலிருந்து அந்த தொடரானது டிஆர்பியில் திணறி வருகிறது. இதன் காரணமாகத்தான் திவ்யாவும் தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் சீரியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்து வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!