
அம்மன் கெட்டப் போட்ட காயத்ரி யுவராஜ் : வைரலாகும் புகைப்படங்கள்
டிச 10, 2022
Advertisement
நடிகை காயத்ரி யுவராஜ் சின்னத்திரையில் பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். "அழகி", "மெல்ல திறந்தது கதவு", "அரண்மனை கிளி" உள்ளிட்ட சில தொடர்கள் காயத்ரியின் நடிப்பில் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றவை. தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி, டுவிட்டருக்கு சென்றால் அரசியல் இன்ஸ்டாகிராமிற்கு வந்தால் மாடலிங்க், போட்டோஷூட் என கலக்கி வருகிறார். அண்மையில் கடற்கரையில் வைத்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களில் காயத்ரி பார்ப்பதற்கு சாக்ஷாத் அம்மன் போலவே காட்சியளிக்கிறார். அதன் மேக்கிங் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவும் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!