
மைனாவை டார்க்கெட் செய்த ரச்சிதாவின் கணவர்
சென்றவார எபிசோடின் போது ரச்சிதாவை திருமணத்திற்கு கூப்பிடாததால் அவர் தன்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார் என்றும், ஷூட்டிங் போது ரச்சிதா தன்னை இப்படி டிரெஸ் போடனும் அப்படி டிரெஸ் போடனும் என்று சொல்லி கட்டாயப்படுத்தினார் என்றும் மணியிடம் ரச்சிதாவை பற்றி மைனா குறை கூறியிருந்தார். தவிர ஏலியன் டாஸ்க்கிலும் எல்லை மீறி ரச்சிதாவிடம் கேள்வி கேட்டார்.
இந்நிலையில், ரச்சிதாவின் கணவர் தினேஷ் கூறுகையில் "10 ஆண்டுக்கும் மேலான தோழி என்று சொல்லிக்கொள்ளும் சக போட்டியாளர் உன்னை தூண்டிவிடும் வகையில் மோசமான கேள்வி கேட்கிறார். ஆனால், நீ அதை அழகாக சமாளித்தாய். தனிப்பட்ட தாக்குதலை திறமையாக எதிர்கொண்டாய். பலரது மனதை வென்று வா!" என்று பதிவிட்டு ஐ ஸ்டேண்ட் வித் ரச்சிதா என ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ரச்சிதாவை மைனா டார்க்கெட் செய்வதாக கோபமடைந்துள்ளனர். மேலும், "சரவணன் மீனாட்சி" சீரியல் படப்பிடிப்பின் போது ரச்சிதாவை மைனா புகழ்ந்து பேசும் வீடியோவையும் வெளியிட்டு மைனாவை பச்சோந்தி எனவும் விமர்சித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!