
ஸ்வேதா பண்டேகரின் காதலர் இவர் தான்? - திருமண தேதியுடன் மீண்டும் சர்ப்ரைஸ்
இதனையடுத்து பலரும் ஸ்வேதாவின் காதலர் யார் எனக் கேட்டு நச்சரித்து வந்தனர். தற்போது ஸ்வேதாவின் காதலர் யார் என்பது அவர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் தெரிந்துவிட்டது. அவர் வேறு யாருமில்லை பிரபல வீஜே மற்றும் நடிகரான மால் மருகன் தான். அத்துடன் அந்த புகைப்படத்தில் ஸ்வேதா - மால் மருகனின் திருமணம் வருகிற டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள தகவலும் தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மீண்டும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஸ்வேதா - மால் மருகனின் திருமணத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!