
அசீம் எல்லோரிடமும் அப்படித்தான் சண்டை போடுவார் - நடிகை சுபத்ரா ஓப்பன் டாக்
இந்நிலையில், நடிகை சுபத்ரா அளித்துள்ள பேட்டியில் அவர் அசீம் குறித்து கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. சுபத்ரா "பூவே உனக்காக" சீரியலில் அசீமுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அசீமுக்கும் ஹீரோயினுக்கும் ஒருமுறை பயங்கர சண்டை நடந்ததாகவும் அதற்குப்பின் தேவிப்பிரியாவுடனும் அசீம் சண்டையிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அவருக்கு முன்னால் யார் கைநீட்டி பேசினாலும் கோபாமாகிவிடுவார், சண்டை போடுவார். இப்போது பிக்பாஸ் வீட்டில் அவர் எப்படியிருக்கிறாரோ அதுதான் அவரது உண்மையான முகம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக அசீமின் சக நடிகரான அருண் ராஜனும் அசீம் குறித்து இதே கருத்துகளை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!