
சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஜூலி
அதன்பின் பல கமர்ஷியல் நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள், சீரியல்களில் கெஸ்ட் ரோல் என கலந்து கொண்டு வந்த ஜூலி, தற்போது ஜீ தமிழ் சீரியலில் நடிக்க உள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "கண்ணத்தில் முத்தமிட்டால்" என்ற தொடரில் கொற்றவை என்ற கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்கிறார். இது தொடர்பாக வெளியான புதிய புரோமோவை வைத்து பார்க்கும் போது ஜூலியின் கதாபாத்திரம் அந்த தொடரில் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஜூலிக்கு இது நல்லதொரு கம்பேக்காக நிச்சயம் அமையும் என ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!