
ரோஜாவுக்கு கல்யாணமா? - மணப்பெண் கெட்டப்பில் வெளியான ப்ரியங்கா நல்காரி
இந்நிலையில், ரோஜா தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ப்ரியங்கா மணப்பெண் கெட்டப்பில் தன் பெற்றோருடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் ப்ரியங்கா நல்காரிக்கு தான் திருமணம் எனவே இனி ரோஜா சீரியலில் அவர் நடிக்கமாட்டார் என்று நினைத்து பீல் செய்ய தொடங்கினர். ஆனால், உண்மையில் ப்ரியங்காவின் சகோதரியான பாவ்னா நல்காரிக்கு தான் அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்திற்கு ப்ரியங்காவின் சக நடிகர்களான அஸ்வந்த் திலக் மற்றும் சந்தோஷ் வருகை தந்துள்ளனர். அவர்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களில் இருந்து திருமணம் ப்ரியங்காவுக்கு அல்ல அவரது சகோதரிக்கு தான் என்பது தெரியவந்துள்ளது. இந்த உண்மையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!