
மைனா தான் ஏத்தி விடுறாங்க : ரச்சிதாவின் கணவர் காட்டம்
சமீபத்தில் கூட ரச்சிதாவை முத்தம் கொடுக்க சொல்லி ராபர்ட் மாஸ்டர் வற்புறுத்திய விஷயம் சோஷியல் மீடியாவில் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அந்த விவகாரத்தில் பலரும் ரச்சிதாவின் பக்கம் சப்போர்ட்டாக நின்று ராபர்ட் மாஸ்டரை வெளியேற்ற வேண்டும் என கூறினர். ரச்சிதாவின் கணவர் தினேஷ் இந்த விவகாரம் குறித்து போஸ்ட் போட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ராபர்ட் மாஸ்டரை காட்டிலும் மைனாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பேட்டியில், "ராபர்ட் மாஸ்டர் இப்படியெல்லாம் செய்ய மைனா தான் காரணம். மைனா தான் ராபர்ட் மாஸ்டரை தேவையில்லாமல் ஏத்தி விடுகிறார். ராபர்ட் மாஸ்டரும், மைனாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால், ரச்சிதா நிச்சயமாக பைனல் வரை செல்வார்" என்று கூறியுள்ளார். அவரது கருத்துக்கு தற்போது ரச்சிதாவின் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!