
காதலை அறிவித்த புதிய சின்னத்திரை ஜோடி
விஷ்ணுகாந்த் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் சில தொடர்களில் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்து வந்தார். அதேபோல் "நிறைமாத நிலவே" என்கிற வெப் தொடரில் நடித்திருந்த சம்யுக்தாவும் விஜய் டிவியின் "பாவம் கணேசன்" தொடரின் மூலம் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஷ்ணுகாந்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சம்யுக்தா, அந்த பதிவில், "கடினமான சூழலுக்கு மத்தியில் நான் உன்னை சந்தித்தேன். என் சிரிப்பிற்கு நீ தான் காரணம். நான் உன்னுடன் இருக்கும் போது என்னையே சிறப்பாக உணர்கிறேன். என்னுடைய வாழ்வில் வந்ததற்கு நன்றி. இந்த பிறந்தநாள் முதல் என்னுடைய அழகான வாழ்க்கை பயணம் உன்னுடன் பயணிக்க இருக்கிறது" என்று எழுதியுள்ளார்.
இந்த புதிய காதல் ஜோடிக்கு சக நடிகர்களும் தொலைக்காட்சி ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!