
சொகுசு கார் வாங்கிய சூப்பர் சிங்கர்
இந்த நிலையில் தற்போது பூவையார் சொந்த கார் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் உள்ள பூவையாரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரைவிங் லைசென்சுக்கான வயது வரும் முன்பே பூவையார் கார் வாங்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் திறமை இருந்தால் சாதிக்கலாம், அதற்கான உயரத்தை அடையலாம் என்பதற்கு பூவையார் ஒரு உதாரணம் என்று நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சின்னத்திரை நிகழ்ச்சி, சினிமாவில் நடிப்பு, பாட்டு, வெளியூர் கச்சேரிகள் போன்றவற்றில் பூவையார் பிசியாகி விட்டதால் அவருக்கு கார் தேவையாக இருக்கிறது. அதற்காகவே அவர் வாங்கி உள்ளார் என்ற அவருக்கு நெருக்கடமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!